விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாழை தண்-ஆம்பற்*  தடம் பெரும் பொய்கைவாய்* 
  வாழும் முதலை*  வலைப்பட்டு வாதிப்பு உண்*
  வேழம் துயர் கெட*  விண்ணோர் பெருமானாய்* 
  ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்* 
   அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாழை - (கரையிலே) தாழைகளையும்;
தண் ஆம்பல் - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களையுமுடைய;
தட பெரு - மிகவும் பெரிய;
பொய்கை வாய் - தடாகத்தினுள்ளே;
வாழும் - வாழ்ந்துகொண்டிருந்த;

விளக்க உரை

கண்ணபிரான் கஜேந்திராழ்வானாகிற ஒரு மிருகத்துக்காக அந்தப்புரத்தையும் அகன்று அரைகுலையத் தலைகுலைய நெடுந்தூரமோடிக் காரியஞ்செய்தவனாயிருந்துவைத்து, அருகிலுள்ள எங்களை இவ்வாறு அகற்றுவதே! இதென்ன கொடுமை! என்று முறைப்படுகின்றனர். பொய்கைவாய்-பொய்கையிலே; வாய்-ஏழனுருபு. ‘நன் சாபமோக்ஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ’ என்று இதே நினைவாக அம்முதலை அப்பொய்கையினுள்ளே உறைந்திருந்ததனால் ‘வாழும் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது; நற்கதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்குமிருப்பை வாழ்ச்சியாகச் சொல்லக்கடவடிறே. முதலை என்னுஞ்சொல் இலக்கணையால் அதன் வாயை உணர்த்திற்று.

English Translation

In the large lotus lake lined by screw pine, the elephant was caught and mauled by the crocodile. To rid his travails the Lord of gods employed his discus. Today we are finished,--by the Lord who graced the elephant,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்