விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொண்டது உலகம் குறள்*  உருவாய் கோளரியாய்,*
  ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது*  - உண்டதுவும்*
  தான் கடந்த ஏழ் உலகே*  தாமரைக்கண் மால் ஒரு நாள்,* 
  வான் கடந்தான் செய்த வழக்கு.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குறள்உரு ஆய் - வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம் - பூமி முதலிய லோகங்களை
கொண்டது - ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய் - மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து - மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே

விளக்க உரை

ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயனென்று கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைகாட்டுதற்காக அப்பெருமான் தன்னை அழியுமாறியும் ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறபடியைப் பாருங்களென்கிறாரிதில் உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான் இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக அன்றியும் உடல் ஒருபடியும் முகம் ஒருபடியுமாக வடிவெடுப்பதும் பரிஹாஸாஸ்பதம்; அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க. அன்றியும் தன் காலிலேபட்ட வஸ்து அசுத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்; எம்பெருமானோ வென்னில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே (மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான். ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமையைத் தான் நெருக்கிக் கொள்வதற்காகவே யாதலால் இவனே ஸர்வ ஸ்வாமியென்பது திண்ணமன்றோ. “வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றடிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்; தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிச்செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம் நியாயமான காரியங்கள் என்பதாகவொரு கருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய், சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்து கொள்வதும், உலகத்தில் எங்கும் என்றுங் கண்டறியாதவொரு விஜாதீயமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளந்தொழிப்பதும்; தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத்தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாறாம். ப்ரேமத்தின் “கனத்தாலே” பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும். வான் கடந்தான் = வானத்தை அளவிடிலும் அளவிட வொன்ணாத பெருமையை யுடையவனென்றும் ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம்.

English Translation

A graceful manikin received the Earth; a fierce lion fore into Hiranya's chest; a child swallowed the seven worlds, these are some of the wonders of my lotus-eyed Earth-stradding Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்