விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தனக்கு அடிமை பட்டது*  தான் அறியானேலும்* 
    மனத்து அடைய வைப்பது ஆம் மாலை,* - வனத் திடரை-
    ஏரி ஆம் வண்ணம்*  இயற்றும் இது அல்லால்* 
    மாரி யார் பெய்கிற்பார் மற்று?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தனக்கு - சேதநனாகிய தனக்கு
அடிமை - சேஷத்வமென்பது
பட்டது - அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும் - தான்தெரிந்துகொள்ள அசக்தனாயிருதாலும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படியாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத்துப் படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்; நாம் யாதொரு ஸாதாநாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண்ணும் மரமும் கல்லும் கரியும்போலே அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப்பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள வாசிக்காகச் செய்யத்தக்க தொன்றுண்டு, அதாவது அவனைப் பெறவேணுமென்னும் ருசிமாத்திரம் நமக்கு இருக்கத்தகும். மற்றபடி பேற்றுக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.

English Translation

Though we may not have discovered what service the Lord intends for us, we must still keep our hears pointed towards him. We can only clear a forest and build a bound for making a lake, but who can make it rain?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்