விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரிந்தது வெம் சமத்துத்*  தேர் கடவி,*  அன்று-
    பிரிந்தது சீதையை மான் பின் போய்,*  - புரிந்ததுவும்-
    கண் பள்ளிகொள்ள*  அழகியதே,*  நாகத்தின்-
    தண் பள்ளி கொள்வான் தனக்கு.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம் சமத்து - கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர்கடவி - (பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும் - அலைந்ததும்,
அன்று - இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய் - மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும் - பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண் - தரையிலே

விளக்க உரை

எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளென்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதேசித்தார்; உண்டியே உடையே உகந்தோடித் திரியுமிம்மண்டலத்திலே இவருபதேசத்தை ஆதரிப்பார் ஆர்? அவரவர் களிஷ்டப்படி தங்களுடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய, ‘ஐயோ! இப்பாவிகளுக்காக எம்பெருமான் கிருஷ்ணனாய்ப் பிறப்பதும் இராமனாய்ப் பிறப்பதுமாய்க்கொண்டு படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத் திரிகின்றார்களே!’ என வருந்தின ஆழ்வார், அப்பெருமான் ராமக்ருஷ்ணாவதாரங்களிலே அதிஸுகுமாரமான திருமேனியோடே பட்ட மிறுக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார். கண்ணபிரானாய்த் திருவவதரித்துப் பாரதப் போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விடுகிற அம்புகள் தன்மேலே படும்படி திருமேனிக்குக் கவசமும் தரியாதே கிடந்து அர்ஜுநன் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு பட்டபாடுகளை முதலடியிலே பேசினர்.

English Translation

The Lord who reclines on a cool serpent bed went about driving a chariot in war. He followed a deer and lost his Sita, and slept on the hard floor. What an irony. though!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்