- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார். கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க. கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது - அவர்களை ஆராதித்தமை கூறியவாறு. இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம். இடைநின்ற வின்பத்தராவர் - எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது. இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.
English Translation
Filled with love, I stand with flowers and proper chants. O Protector! As a child you destroyed a cart, Asking for land you protected the earthlings Pray correct my ways.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்