விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்று அதுகண்டு அஞ்சாத*  ஆய்ச்சி உனக்கு இரங்கி,* 
  நின்று முலை தந்த இந் நீர்மைக்கு,*  அன்று-
  வரன்முறையால் நீ அளந்த*  மா கடல் சூழ் ஞாலம்,*
  பெரு முறையால் எய்துமோ பேர்த்து?     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - (பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அதுகண்டு - முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத - ‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி - யசோதைப் பிராட்டியானவள்
நன்று - தரித்து நன்று

விளக்க உரை

முலை கொடுக்கவந்த பேய்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை ‘இதென்ன உத்பாதம்!’ என்றுவெருண்டோட வேணுமேயல்லது, அணுகிவந்து முலைகொடுத்திருக்ககூடாது; 1. “பேய்ச்சி முலையுண்ட பின்னையிப்பிள்ளையைப் பேசுவ தஞ்சுவனே” என்று அஞ்சிக் காதவழியோட வேண்டியிருக்கவும். 2. “பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” என்னும்படி அச்சமின்றி அணுகிவந்து உன்னை எடுத்தணைத்து முலைகொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால், முன்பு நீ உலகளந்த அரிய பெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரிதென்று சொல்லலாம்படி யிருக்கின்றதென்கிறார். இத்தால் - யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று. வரன்முறையால் நீ அளந்த = ‘வரம்‘ என்னும் வடசொல் (மகர னகரப் போலியினால்) ‘வரன்‘ என்று கிடக்கிறது. ‘சிறந்ததான‘ என்றுபொருள். சிறந்த முறையானது ஸ்வஸ்வாமிபாவ ஸம்பந்தம். உலக முழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த மிருக்கையாலேயன்றோ தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள நேர்ந்தது.

English Translation

Even then the cowherd dame yosada grieved for you and gave you her breast to suck without fear. Can the whole ocean-girdled Earth you measured and took be a return for her love?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்