விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாவலி வேள்வியில்*  மாண் உருவாய்ச் சென்று*  
    மூவடி தா என்று*  இரந்த இம் மண்ணினை* 
    ஒரடி இட்டு*  இரண்டாம் அடிதன்னிலே* 
    தாவடி இட்டானால் இன்று முற்றும்* 
     தரணி அளந்தானால் இன்று முற்றும்   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா வலி - மஹாபலியினுடைய;
வேள்வியில் - யாகபூமியிலே;
மாண் உரு ஆய் சென்று - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி;
மூ அடி தா என்று - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று;
இரந்த - யாசித்துப்பெற்ற;
இ மண்ணினை - இந்தப்பூமியை;

விளக்க உரை

கண்ணபிரான் தன்னை அழியுமாறும் அடியார்களின் வேண்டுகோளைத் தலைக்கட்டித் தருமவனாயிருந்து வைத்து எங்கள் பக்கலிலே தீமை செய்ய ஒருப்பட்டது என்னோ! என்று முறைப்படுகின்றனர். தந்திருவடிகளின் மென்மையை நோக்காமல் காடுமேடுகளை அளந்தருளினவன் அத்திருவடிகளின் ஆயாஸந்தீர நாங்கள் அவற்றைப் பிடிக்கின்றோமென்றால் அதற்கிசைந்து திருவடிகளைத் தந்தருளலாகாதோ! என்ற மனக்குறையை நுண்ணிதினுணர்க. தாவடி இட்டானால்- தாவி அடியிட்டானால்; தொகுத்தல் விகாரம். தாவு அட்ட - தாவுகின்ற அடி என்று உரைப்பாருமுளர். தரணி-பூமியைச் சொல்லக்கடவ இச்சொல்- இன்குப் பொதுப்படையாக உலகங்களைக்குறிக்கும். இலக்கணையால்.

English Translation

He went to Mabali’s sacrifice in the guise of a manikin and asked for three strides of land. He received the gift. With one stride, then the other, he straddled the Universe, Today we are finished,--by the Lord who measured the Earth,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்