விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழல் எடுத்து வாய் மடித்து*  கண் சுழன்று,*  மாற்றார்-
    அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச,*  தழல் எடுத்த-
    போர் ஆழி ஏந்தினான்*  பொன் மலர்ச் சேவடியை*
    ஓர் ஆழி நெஞ்சே! உகந்து.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கழல் எடுத்து - திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார் - எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய்அஞ்ச - பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து - உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று - (பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி) கண்கள் வட்டமிட

விளக்க உரை

உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்ரயித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார். மாவலியினிடத்தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீவிஷ்ணு திரிவிக்கிரமனாய் மூவடி மண்ணை அளக்கப்புக, அதைக்கண்ட மஹாபலிபுத்திரனான நமுதியென்பவன் ஓடிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய, ஸ்ரீவிஷ்ணு ஏன் தகைகிறாய்? நான் தானம் வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன, ‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல; ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசக பிரமசாரியாய் வந்த எனக்குத் தானம் பண்ணினது பொய்யோ?’ என்ன, நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன் வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனாற் சொல்லுகிறாய்?’ என்ன, நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றாகில், நீ முன்னே கேட்ட போதிருந்த வடிவத்தைக் கொண்டு அளந்து கொண்டுபோ’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘இது விகாரப்படுந்தன்மையுள்ள (எப்போதும் ஒரு தன்மையாயிராத) சரரமாயிற்றே, முன்னைய வடிவத்தைக் கொண்டு எப்படியளக்க முடியும்?’ என்ன, இப்படி ஸமாதானஞ் சொல்லவுங்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருந்த நமுசியை வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான் - என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார் ‘என்னிது மாயம் என்னப்பனறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டளவாயென்ன மன்னு நமுசியை வானிற்சுழற்றிய, மின்னுமுடியனே!” (1-8-8) என்ற பாசுரத்தில் அநுஸந்தித்தருளினர்; அதனை இப்பாட்டில் சுருங்க அநுஸந்தித்திருக்கிறாரிவர், மாற்றார் என்று மாவலியின் மகனான நமுசி முதலிய விரோதிகளைச் சொல்லுகிறது. அவர்கள் கண்சுழன்று அழலெடுத்த சிந்தையராய் அஞ்சும்படி வாய்மடித்தான் எம்பெருமானென்க.

English Translation

His one foot raised, the Lord sealed his detractors' lips and dazzled their eyes with his radiant discus. O Heart! Contemplate his lotus feet with joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்