விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிந்து ஐந்தும் உள் அடக்கி*  ஆய் மலர் கொண்டு, ஆர்வம்-
    செறிந்த மனத்தராய் செவ்வே,*  - அறிந்து அவன்தன்-
    பேர் ஓதி ஏத்தும்*  பெருந்தவத்தோர் காண்பரே,* 
    கார் ஓத வண்ணன் கழல்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பஞ்சேந்திரியங்களையும் - பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி - (பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய்மலர் கொண்டு - (பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய் - பக்திமிகுந்த மனத்தையுடையராகி
செவ்வே அறிந்து - (எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து

விளக்க உரை

பகவத் விஷயமானது அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான விலக்ஷண விஷயமென்பதையும், சப்தாதிவிஷயங்கள் இகழத்தக்கவையென்பதையும் நன்றாகத் தெரிந்துகொண்டு, செவி வாய் கண் மூக்கு உடலென்னும் ஐம்புலன்களையும் வெளிவிஷயங்களில் ஓடவொட்டாமல் உள்விஷயமாகிய பகவத் விஷயத்திலேயே உபயோகப்படுத்தி, 1. “செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்” என்றாற்போலே எம்பெருமானுககு உரிய நல்ல புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு ருஜுவான பக்தியையுடையராகய் அப்பரமனுடைய திருநாமங்களையே எப்போதும் அநுஸந்திக்கும்படியான பாக்கியம் எவர்களுக்குள்ளதோ, அவர்கள் அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டநுபவிக்கப்பெற்றவர்கள் என்றாராயிற்று. இத்தால், கீழ்ப்பாசுரத்தில் “நின்னடியை யாரோதவல்லா ரறிந்து” என்றது - இப்படி செய்யமாட்டாத தாந்தோன்றிகளைப் பற்றின வார்த்தை யென்பது விளங்கிற்றாம். தவம் - வாக்கியம்.

English Translation

With understanding, those who draw their senses inward, strew fresh flowers with zeal in their hearts, recite his names, and worship him pateiently will surely see the ocean-hued lord's feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்