விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடி மூன்றில் இவ் உலகம்*  அன்று அளந்தாய் போலும்* 
    அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்,*  - படிநின்ற-
    நீர் ஓத மேனி*  நெடுமாலே*  நின் அடியை-
    யார் ஓத வல்லார் அறிந்து? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படிநின்ற - பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே - கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம் - முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடிமூன்றில் அளந்தாய் போலும் - மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடிமூன்று அவனி - மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய் - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;

விளக்க உரை

எம்பெருமான் மாணுருவாய்ச்சென்று மாவலியிடத்தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில், மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக் கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்பிராயமாக இருதது; பிறகு அளக்கிற ஸமயத்தில் கீழுலகங்களை ஓரடியாலும், மேலுலகங்களை மற்றோரடியாலும் அளந்துகொள்ளுகையாலே மூன்றாவது அடி இரந்து பெற்றது வீணாய்விடும்போலிருந்தது; அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலையையே அதற்கு இடமாகக் காட்ட அதன்மேல் மூன்றாமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினனாக இவ்வாழ்வாருடைய அநுஸந்தான முள்ளதாகக் கொள்க. இந்தலோகம் அந்தரிக்ஷலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றடிகளாலே நீ அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம். காரியத்தில் அப்படி இல்லையே. மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ? அஃது இல்லையே! யாசிக்கிறபோது இருந்த எண்ணம் வேறாகவும் அளக்கிறபோது உண்டான எண்ணம் வேறாகவும் ஆயிற்றே! இது என்ன? என்றபடி.

English Translation

"Three feet of land", you said, and took the Earth! But why ask for three, when two would have sufficed? O Lord of ocean-deep hue! Who can understand this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்