விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நகர் இழைத்து நித்திலத்து*  நாள் மலர் கொண்டு,*  ஆங்கே-
    திகழும் மணி வயிரம் சேர்த்து,*  - நிகர் இல்லாப்-
    பைங் கமலம் ஏந்திப்*  பணிந்தேன் பனி மலராள்,*
    அங்கம் வலம் கொண்டான் அடி.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நகர்  இழைத்து - என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு - (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து - ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும்  தாதுமாக வைத்து
நிகர் இல்லா - ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி - பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு

விளக்க உரை

இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது - விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது. திருமா மகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார். நகரிழைத்து - ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம் பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும் இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்றது - என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.

English Translation

In that city, under a canopy of peals, gems and diamonds and strings of fresh flowers, the Lord is seated with the lotus-dame Lakshmi, borne on his right, I worship his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்