விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பரிசு நறு மலரால்*  பாற்கடலான் பாதம்,*
  புரிவார் புகப்பெறுவர் போலாம்,*  - புரிவார்கள்-
  தொல் அமரர் கேள்வித்*  துலங்கு ஒளி சேர் தோற்றத்து*
  நல் அமரர் கோமான் நகர்.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பால் கடலான் பாதம் - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால் - செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார் - விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர் - ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி - (கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்

விளக்க உரை

ஸமயத்தில் ஆச்ரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளும் திருக்குணத்தி லீடுபட்டு அப்பெருமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரமபதத்திலே சென்று புகப்பெறுவர்; இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே யொழிய கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை; அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார். “புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போலியாய் வந்தது வடமொழியில். “கிமில் ஹி மதுராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவசப்தம்போலே வாக்யாலங்காரமென்க. புரிவார்கள் தொல்லமரர் கேள்வி - புரிவார்களான தொல்லமரருண்டு. முழுகுவது மூக்கைப் பிடிப்பது ஜபிப்பது முதலிய ஸாதநாநுஷ்டங்களைச்செய்பவரான தேவர்கள்; அவர்களுடைய செவிப்புலனுக்கு மாத்திரம் இலக்கானதேயன்றி, கட்புலனுக்கு இலக்கானதன்று பரமபதம். ஆழ்வானருளிய ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் “யத் ப்ரஹம் ருத்ர புருஹூதமுகைர் துராபம் நித்யம் நிவ்ருத்தி நரதைஸ் ஸநகாதி பிர்வா” என்றதும், பிள்ளைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாலையில் “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகுமந்தரத்தான்” என்றதும் காண்க. சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப் பற்றிச் சொல்லுமிடத்து “அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர்மஹாத்மந:” (ஸூர்யன் அக்நிமுதலிய சுடர்ப் பொருள்களிற் காட்டிலும் மிக விஞ்சி விளங்குவது) என்று சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கொளி சேர் தோற்றத்து’ என்றார்.

English Translation

The Lord of gods in heaven is light-effulgent, Those who worship his ocean-reclining form, strewing fresh flowers at his feet will be counted as devotees, worthy of entering his fabled celestial city.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்