- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
தகளியாவது - நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல், (தாளி என்று உலக வழக்கு.) அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத் விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களேயாம். அநுராகத்தில் கணுக்கணுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவுள்ளம் பற்றி அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி. ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத் தோன்றியுள்ள ப்ரீதியின் நிலைமைகளைத் தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷியான நாராயணனுக்குப் பரஜ்ஞானமாகிற சுடர் விளக்கையேற்றி அடிமைசெய்யப் பெற்றேனென்று மகிழ்ந்து கூறினாராயிற்று. எம் பெருமானிடத்தில் எனக்கு அனுராகமானது கணுக்கணுவாக ஏறி வளர்த்துச் செல்லப் பெற்றதனால் அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப் பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனென்பது பரமதாற்பரியம்.
உரை:2
English Translation
Love is my lamp, eagerness is the oil, my heart is the wick. Melting myself, here I light a lamp and offer this Tamil garland of knowledge.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்