விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தள்ளித் தளர் நடை யிட்டு*  இளம் பிள்ளையாய்*
    உள்ளத்தின் உள்ளே*  அவளை உற நோக்கிக* 
    கள்ளத்தினால் வந்த*  பேய்ச்சி முலை உயிர்* 
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்* 
     துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள்ளத்தினால் - (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே;
வந்த - (தன்னைக் கொல்ல)வந்த;
பேய்ச்சி அவளை - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை;
உள்ளத்தின் உள்ளே உறநோக்கி - (’நம்மை நலியவருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே  (எண்ணி) உறைக்கப்பார்த்து;

விளக்க உரை

கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச்செய்தேயே அநாயாஸமாக விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்துவைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப்படுகின்றனர். உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள், வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உறநோக்கினான். ’சுவைத்தான்’ என்ற சொல்நயத்தினால்-விஷந்தடவின அம்முலையைத் தானுண்ணும்போது மாம்பழக்கதுப்பு செப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்; விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக்கூடுமன்றோவென்று சங்கித்து, அக்கண்ணபிரானுக்கு அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கறவுண்டானால்“ என்பது.

English Translation

He was a toddler barely able to walk a step. Deep from his heart he took a good look at her. She was an ogress disguised as a midwife. He sucked her breast and drew her life out. Today we are finished,--unharmed by the poison he drank,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்