விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செற்றுஎழுந்து தீவிழித்து*  சென்ற இந்த ஏழுலகும்,* 
  மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,*  முற்றும்-
  மறையவற்குக் காட்டிய*  மாயவனை அல்லால்,* 
  இறையேனும் ஏத்தாதுஎன் நா.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செற்று - அழித்து
மற்று - பின்பு
இவை - “பிரளயத்தில் அழித்த இப்பதார்த்தங்கள்
சென்ற - (என்னிடத்து) அடங்கிக்கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து - ஆ வென்று வாயைத்திறந்து

விளக்க உரை

காலகதியைக் கடந்து என்றும் பதினாறாக நீடூழி வாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்கண்டேய முனிவன் பத்திர நதிக்கரையில் தவம்புரிந்து நரநாராயணரது ஸேவையைப் பெற்று ‘யான் பிரளயக் காட்சியைக் காணுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அநுக்ரஹித்துச் சென்றபின்பு, மாயவன் மாயையால் மஹாப்ரளயந் தோன்ற, அப்பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய மார்க்கண்டேயன் அவ்வெள்ளத்தில் ஆலிலையின் மீது ஒரு குழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற ஸ்ரீமந் நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட்புகுந்து அங்கிருந்த உலகங்களையும் ஸகல சராசரங்களையும் கண்டு பெருவியப்புக்கொண்டனன் என்ற இதிஹாசம் அறியத்தக்கது. பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியுலும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும் “எய்த்த மார்க்கண்டன் கண்டிடவமலைக்கு முலகழியாதுள்ளிருந்த தென்னே” என்றும் “ஆலத்திலை சேர்ந்தழியுலகை யுட்புகுந்த காலத்திலெவ்வகை நீ காட்டினாய்... வேதியற்கு மீண்டு” என்றும் பேசினவை காண்க யுகந்த காலத்திலே உலகத்திலே அக்ரமம்விஞ்சி அதனால் எம்பெருமான் உக்கிரங்கொண்டு இவ்வுலகங்களை யெல்லாம் அழித்துத் தன்னிடத்திலே யடக்கிக் கொள்வனென்னும் நூற்கொள்கை முதலடியில் காட்டப்பட்டது முதலடியில், சென்ற- சென்றன என்றபடி; அன்சாரியை பெறாத வினைமுற்று.

English Translation

With fiery eyes you destroyed all, then revealed to the vedic seer Markandeya the seven worlds and all else safely fucked into your stomach, O wonder Lord! Words of praise for anyone save you, do not come to my tongue!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்