விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டானை அல்லால்*  கொடுத்தாரை யார்பழிப்பார்,*
    'மண்தா' எனஇரந்து மாவலியை,*  ஒண்தாரை-
    நீர்அங்கை தோய*  நிமிர்ந்திலையே,*  நீள்விசும்பில்-
    ஆரம்கை தோய அடுத்து? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் தாரைநீர் - அழகிய அந்த நீர்த்தாரை
அம் கை - (தனது) அழகிய திருக்கையிலே
தோய - வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார் - பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை - அழகிய கைகள்

விளக்க உரை

மாவலியானவன் தன்னதல்லாத்தைத் தன்னதென்று அபிமாநித்துக்கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணனைபோலவே அவனையுங்கொல்ல வேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒளதாரியமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால் தன்னதான விபூதியை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக்கொண்ட மஹாகுணம் பொருந்தியவன் எம்பெருமான்; இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது ஈடுபடுவாருண்டோ? வஞ்சனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும் சில பழிச்சொற்களைச்சொல்லி அப்பெருமானை உலக மடங்கலும் பழிக்கின்றதேயன்றி, தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் அஹங்காரியென்றும் ஆஸுரப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத்தில் யாருமில்லையே!; குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றோ ஸம்ஸாரிகளின் ஸ்வபாவமிருபதென்பது ‘கொண்டானையல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்?’ என்பதன் கருத்து. தோய- செயவெனெச்சம் உடனிகழ்ச்சிப் பொருளது. நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே - மாவலி தாரைவார்த்த உதகமும் ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ? என்றபடி. ‘நீள்விசும்பிலார் அங்கை தோய” என்பதற்கு- விசும்பிலுள்ள தேவர்கள் (எனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும், “ நீள்விசும்பில் ஆரம் கைதோய” என்றெடுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த முக்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஓங்கி) என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

As your feet stretched, your jewelled hands reached out into the Quarters, -when you begged Mabail for land, then grew and took the Earth. Everybody cries fowl on the receiver of the gift, does no one blame the giver?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்