விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேனுகன் ஆவி செகுத்துப்* 
    பனங்கனி தான் எறிந்திட்ட*  தடம் பெருந்தோளினால்* 
    வானவர் கோன் விட*  வந்த மழை தடுத்து* 
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேனுகன் - தேநுகாஸுரனுடைய;
ஆவி - உயிரை;
செகுத்து - முடிக்க நினைத்த அத்தேனுகனை;
பனங்கனி - (ஆஸிராலிஷ்டமான) பனைமரத்தின் பழங்கள் (உதிரும்படியாக);
எறிந்திட்ட - (அந்த மரத்தின் மேல்) வீசியெறிந்த;

விளக்க உரை

தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்; இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு. பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை. ‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும், ‘அவை உய்யக்கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது; அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.

English Translation

He flung the Asura Dhenuka against a Palm tree and killed him; with strong arms he held a mountain and stopped the rains sent by the king of gods Indra and saved the cows. Today we are finished,--by the Lord who raises cows,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்