விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்புஆழியானை*  அணுகுஎன்னும், நா அவன்தன்*
    பண்புஆழித் தோள்பரவி ஏத்துஎன்னும்,*  முன்புஊழி-
    காணானைக்*  காண்என்னும் கண்செவி கேள்என்னும்* 
    பூண்ஆரம் பூண்டான் புகழ்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்பு - பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை - ஸர்வேச்வரனை
அணுகு என்னும் - கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா - வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் - அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத்தோள்களைப் பேசித்துதி என்று உபதேசிக்கின்றது;

விளக்க உரை

ஆசார்ய சிஷ்யக்ரமம் மாறாடுகிறது இப்பாட்டில். கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்‘ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார். இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால் அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வஹிக்கக்கடவனவாய் இவர் தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசிகிறாரிதில். அன்பு ஆழியானையணுகென்னும் – இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக் குறித்தனர்; அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்சு என்பது வேறொரு வஸ்துவாகவும் தோன்றாமல் அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார். பண்பாழித்தோள் – பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம். பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல் போன்ற தோள் என்றும், பண் –அழகையும் பாழி- வலிமையையு முடைய, தோள் என்றும் உரைக்க. முன்பூழிகாணானை –ஊழி என்று காலத்துக்குப்பெயர்: முன்புள்ள காலத்தைக் காணாதவனென்றால் என்ன தாற்பரியம்? மஹாபராதியான ஒரு சேதநன் வந்து தன்ளை ஆச்ரயித்தால், நேற்றுவரையில் அவன் எப்படியிருந்தான், என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான் என்று தாற்பரியம்.

English Translation

"The Lord who wields the discus is my love, go to him", says my heart, "Praise his strong and beautiful arms and offer worship", says my tongue, "See the Lord who dispersed the past", Say my eyes, "Hear the praise of the necklace-and-garland-wearing Lord", say my ears!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்