விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தடம் படு தாமரைப்*  பொய்கை கலக்கி* 
  விடம் படு நாகத்தை*  வால் பற்றி ஈர்த்து* 
  படம் படு பைந்தலை*  மேல் எழப் பாய்ந்திட்டு* 
  உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்* 
   உச்சியில் நின்றானால் இன்று முற்றும்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தடம்படு - இடமுடைத்தான [விசாலமான];
தாமரைப்பொய்கை - தாமரைப்பொய்கையை;
கலக்கி - உள்ளே குதித்து கலங்கச்செய்வது (அக்கலக்கத்தினால் சீற்றமுற்று);
விடம்படு - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின;
நாகத்தை - காளிய ஸர்ப்பத்தை;

விளக்க உரை

இடையர்களுக்கு பசுக்களும் விடாய்தீர நீரைப் பருக வொண்ணாதபடி தாமரை பொய்கையில் நெடுநாளாய் கிடந்த காளிய நாகத்தின் கொழுப்படங்கினபடியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல் ‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத்தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ? இக்கஷ்டங்களை யாம் பொருத்து உயிர்தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம். ‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச்சொல்லும், பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்கவேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு; பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க. ‘இவன் இப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடுநடுங்கி அஞ்சி கிடந்த அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.

English Translation

Entering a lotus lake, and grasping a venomous serpent by its tail, he jumped on to its wide hood raised high, he shook his body and danced , today we are finished,--nad stood on its head,-- O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்