விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குண்டலம் தாழ*  குழல் தாழ நாண் தாழ*
    எண் திசையோரும்*  இறைஞ்சித் தொழுது ஏத்த* 
    வண்டு அமர் பூங்குழலார்*  துகிற் கைக்கொண்டு* 
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்* 
     வேண்டவும் தாரானால் இன்று முற்றும் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குண்டலம் - கர்ணபூஷணங்களானவை;
தாழ - (தோள்ளவும்) தாழ்ந்து தொங்கவும்;
குழல் - திருக்குழல்களானவை;
தாழ - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்;
நாண் - (திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது;

விளக்க உரை

கண்ணபிரான், இடைச்சிகள் கரையிற் களைந்து வைத்திருந்த புடவைகளை தான் கைக்கொள்ளும்போது குனிந்துஎடுக்க வேண்டியிருந்ததால் குண்டலமுங் குழலும் நாணும் தாழப்பெற்றன. நாண்-கழுத்துக்கு அலங்காரமாக அணிந்து கொண்டுள்ளதொரு கநககண்டிகை. “உய்யுலகு படைத்துண்ட மணிவயிற்றினாய்ப் பரம்பரனாயிருந்துள்ளவன் கர்மவயசயரைப்போல் இங்ஙனே வந்து பிறந்துமல்லாமல் இவ்வாறு இடைப்பெண்களோடு இட்டீடுகொண்டு விளையாடவும் பெறுவதே! இதென்ன ஸெளசீல்யம் !” என்று பலரும் புகழா நிற்பர் என்ற கருத்தைக்காட்டும் இரண்டாமடி. ‘இறைஞ்சி’ என்றாலும் ‘தொழுது’ என்றாலும் ‘வணங்கி’ என்றே பொருளாம். இங்கு ‘இறைஞ்சி’ என்பதனால் மாநஸமான வணக்கத்தையும், ‘தொழுது’ என்பதனால் காயிகமான வணக்கத்தையும் சொல்லுகிறதென்று கொள்ளலாம். விண் தோய் மரம்-ஆகாசத்தளவும் ஓங்கி உயர்ந்துள்ள மரமென்றபடி. எங்களுடைய குழலைக்கண்டு மகிழ்ந்து கூடவிருந்து அநுபவிக்கபெறாமல் குரங்கு போல் மரத்தின் மேலேறி கிடப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோற்ற ‘வண்டமர் பூங்குழலார்’ என்கிறார்கள்

English Translation

His ear pendants hang low, his curls hang low, his neck chain hangs low, gods and men from the eight Quarters bow low and offer worship. He took the Sarees of the bee-humming flower-coiffured dames and climbed up the sky-touching Kurundu trees, today we are finished,--and doesn’t yield even if we beg,--O, we are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்