விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
    சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*
    காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
     வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆற்றில் இருந்து - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு;
விளையாடுவோங்களை - விளையாட நின்ற எங்கள் மேல்;
சேற்றால் எறிந்து - சேற்றை விட்டெறிந்து;
வளை - எங்களுடைய கைவளைகளையும்;
துகில் - புடவைகளையும்;

விளக்க உரை

இவன் நினைத்தபடி தீம்பு செய்ய வொண்ணாதபடி பலருடைய போக்குவரத்துள்ள இடத்திலே நாங்களிருந்து விளையாடினால் அங்குந் தான் வந்து தீமைசெய்துவிட்டு ஓடிவந்து ஒளிந்துகொண்டதுமன்றியில் ஒருவார்த்தையும் சொல்லாதொழிகின்ற உன் பிள்ளையின் தீம்பு நிமித்தமாக நாங்கள் உயிரையிழக்கப் புகாநின்றோமென்று சில ஆய்ப்பெண்கள் யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனரென்க. கண்ணபிரான், பிறரறியாதபடி கையால் தொட்டுச் சில விலாஸங்கள் பண்ணினானாகில் ஒரு குறையுமில்லை; பிறரறிந்து ‘இதுவென்?’ என்று கேட்கும்படிச் சேற்றையிட்டெறிந்தானே யென்று வருந்து கின்றனர் போலும், வளையையும் துகிலையும் தாராதொழிந்தாலும் வாயில் நின்றும் ஒரு முத்து உதிர்த்தானாகில் உயிர் தரித்திருப்பர்கள் போலும். முற்றும் ==’’’’’’ ‘முற்றுதும்’ என்பதன் குறை. முற்றுதும் -தன்மைப்பன்மை வினைமுற்று. உயிரை இழந்து கொண்டேயிருக்கிறோம் என்று கருத்து,

English Translation

We were playing in the river. He threw sand on us and made off with our bangles and our Sarees. Swifter than wind he sped away and went into his house. He doesn’t answer our calls, today we are finished,--says nothing about our bangles, --O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்