விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழல்ஒன்று எடுத்து*  ஒருகை சுற்றிஓர் கைமேல்,* 
    சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* - அழலும்-
    செருஆழி ஏந்தினான்*  சேவடிக்கே செல்ல,* 
    மருவுஆழி நெஞ்சே! மகிழ்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு கழல் - ஒரு திருவடியை
எடுத்து - மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை - ஒரு திருக்கையாலே
சுற்றி - [பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து
ஓர் கை மேல் - மற்றொரு திருக்கையிலே.

விளக்க உரை

உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

English Translation

With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்