- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திருவீதியிலேயிருந்து பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திருமண்டபமும் கற்பித்துப் பெருந்திருப்பாவாடையும் அமுதுசெய்வித்து .’ எம்பெருமானார் ! ப்ரஸாதப்படும்’ என்று மணலைக் கையாலே முகந்தெடுக்க தத்காலத்திலே மாதுகரத்துக் கெழுந்தருளுதிறவுடையவர், அவ்விடத்திலே அது கேட்டருளித் தெண்டளிட்டு அவர்களெடுத்த ப்ரஸாதத்தை பாத்ரத்திலே ஏற்றார் என்று ஜீயரருளிச் செய்தார்’ [= நம்பெருமாள் ஸந்நிதியில் நடக்கிற ரீதிகளை அப்படியே அபிநயித்துத் தெருப்புழுதியில் ஓரு நாள் விளையாடிக் கொண்டிருந்த சிறுபிள்ளைகள் ஒரு கொட்டங்குச்சியில் மண்ணைவாரி யெடுத்துக்கொண்டு, ஸந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகிற க்ரமத்திலே சொல்லிக்கொண்டு வரும்போது “ஜீயோ! “ என்று அருளிப்பாடு சொல்லிக்கூவ, அந்த ஸமயத்தில் யாத்ருச்சிகமாக பிக்ஷைக்கெழுந்தருளிக் கொண்டிருந்த உடையவர் இவ்விளையாட்டொலியைக் கேட்டு மெய்யே ப்ரதிபத்தி பண்ணீ ‘ நாயிந்தே!’ என்று சொல்லிக்கொண்டேபோய் ஸேவித்து அந்த மண்ணைச் சிக்கத்தில் ஏற்றுக்கொண்டார்..] “எங்களாழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற்பழம் வேண்ட, ‘நீயார்?” என்று அவர்கேட்க, ஜீயர்மகனான ஆயர்தேவு என்ன, ஜீயரக்கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக்குடியிருக்க வொட்டுகிறிலன் என்றார்.” [ - நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம். அப்பெருமாள் , திருக்குருகைப்பிரான் பிள்ளானுடைய சிஷ்யரான எங்களாழ்வானுக்கு ஸ்வப்நத்திலே ஸேவைஸாதித்து, தான் இன்னானென்று தெரிவித்து நாவற்பழம் யாசிக்க, மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீயரைக் கண்டு ‘உங்கள் பெருமாள் நாவற்பழத்துக்காக என்பிராணனை வாங்குகிறாரே’ என்று விநோதமாக ஸாதித்தாராம். கண்ணபிரானான விபவத்தில் உகந்திருந்த நாவற்பழத்தை அர்ச்சையிலும் உகந்தபடி சொல்லிற்றென்க.]
English Translation
Devotees get to see the Lord in the forms they wish to see him dearly. His takes the name they wish to call him by, He is of the nature they contemplate in their heart dearly. He is the discus-wielding lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்