விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
  பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
  கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
  எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு - வண்டுகளானவை;
களித்து - (தேனைப்பருகிக்) களித்து;
இரைக்கும் - ஆரவாரங்கள் செய்யப்பெற்ற;
பொழில் - சோலைகளாலும்;
வரு - (அச்சோலைகளுக்காகப் பெருகி) வாராநின்றுள்ள;

விளக்க உரை

பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும் அவர்களது திருவடிகளை யான் முடிமேல் அணிவேன் என்பதாகும். “குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்க ளிவையாயிரத்து ளிப்பத்தும், ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே”” என்று நம்மாழ்வர் பாசுரத்தை அடியேற்றிய தாமிது. இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிlத்த்தில் தமக்குள்ள கெளரவப்புத்தியும் தெரிவிக்கப்பட்டனவாம். “என் தலைமேலான” என்று வருவதனால் ‘பட்டபிரான் விட்டுச் சித்தன்’ என்பது தன்மையிற் படர்க்கை வந்த வழுமதியாம். மேலான-பலவின்பாற் குற்ப்பு முற்றிற்று.

English Translation

This decand of songs by Vishnuchitta, Pattarbiran, recalls the age-old pranks of the Lord of Srirangam surrounded by bee-humming groves watered by the sweetly-flowing Kaveri. Those who can sing it and dance will become Govinda’s devotees, masters of mine, and light of the eight Quarters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்