விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சொல்லில் அரசிப் படுதி நங்காய்!*  சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்*  கையில் வளையைக் கழற்றிக்கொண்டு* 
    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற*  அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து* 
    நல்லன நாவற் பழங்கள் கொண்டு*  நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நங்காய் - யசோதைப் பிராட்டி
சொல்லில் - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி - அதற்காக நீ சீற்றம் கொள்ளாநின்றாய்
உன் பிள்ளைதான் - உன் பிள்ளையோ என்றாய்
சூழல் உடையனே - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே
 

விளக்க உரை

உன் மகன் தன்னை கூவிக்கொள்ளாய் என்று ஒருத்தி சொல்லி வாய் மூடுவதற்குள் மற்றொருத்தி வந்து கண்ணபிரான் தன் வீட்டில் செய்த தீமைகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். (நானல்லேன் இத்யாதி.) நாவற் பழக்காரியின் கையில் வளையிருக்கக் கண்டு இவ்வளை உனக்கு வந்தெதெப்படி ? என்று இவள் கேட்க அவள் ‘இதை எனக்கு இவன் தந்தான்’ என்று கண்ணனை காட்ட, இவள் ‘நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொண்டு கொடுத்தாய்?’ என்று கண்ணனைக் கேட்க அதற்கு அவன் “நான் அல்லேன் காண், என்கையில் வளை கண்டாயோ? நான் உன் வீட்டிற் புகுந்ததை கண்டாயோ? உன் மகளைப் பேர் சொல்லி அழைக்கக் கண்டாயோ? வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ? கண்டாயாகில் உன்மகள் வளையை அப்போதே பிடுங்கிக் கொள்ளா விட்டதேன்?” என்றார் போலச் சில வார்த்தைகளைச் சொல்லி அவளை மறு நாக்கெடுக்க முடியாத படி பண்ணிச் சிரியாநின்றான் என்பது ஆன்றோர் கருத்து. அரசி - அரசன் மனைவி. அரசிப்படுதி - அரசியின் தன்மையை அடைகிறாய்; இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது. சூழல் - சூழ்ச்சி ; தந்திரம்; ‘ அல்’ விகுதி பெற்ற தொழிற்பெயர்

English Translation

O Good Lady, your son is full of vice. If I tell you what he did you will be furious. He entered my house, called my daughter, removed her bangle and brought it out through the back door. He gave it to a seller for some Rose-apple, then laughed saying, “it wasn’t me!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்