விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்னல் இலட்டுவத்தோடு சீடை*  காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு* 
    என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்*  இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்* 
    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்*  பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலட்டுவத்தோடு - லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு;
சீடை - சீடையும்;
கார் எள்ளின் உண்டை - காரென் இட்டு வாரின எள்ளுண்டையையும்;
கலத்தில் - அவ்வ வற்றுக்கு உரிய பாத்திரங்களிலே;
இட்டு - நிரைத்து;
 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் யசோதையா லழைக்கப்பட்டும் வாராமல் மற்றொருத்தி வீட்டில் சென்று அங்குள்ள பக்ஷ்ணங்களையெல்லாம் நிச்சேஷமாகத் தானே புஜித்து இவ்வகையான தீம்புகளைச் செய்ய அவ்விடைச்சி யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனள். ‘கன்னல்’ என்கிறவிது மேற்சொல்லுகிறவை எல்லாவற்றோடும் அந்வயிக்க க் கடவது. இலட்டுகத்தோடு என்றும் பாடமுண்டாம். ‘பெறுத்திப் போந்நான்’ என்பது வ்யதிரேகோக்தி; பிற்குறிப்பு ; அவற்றில் நானும் சில பெறும்படி சேஷப்படுத்தாமல் முழுவதையும் தானே வாரியுண்டான் என்று கருத்து. பெறுத்திப் போந்தான் - பெற்றுப் போனான் என்றுமாம். இப்பாட்டில் ஈற்றடிக்கு வேறு வகையாகவும் கருத்துரைக்கலாம். ‘உன் மகன்றன்னைக் கூவிக் கொள்ளாய்’ என்று அவ் விடைச்சி சொன்னவாறே முச்சந்தியும் அவன் மேற் குற்றங் கூறி கதறுகையேயோ உங்களுக்கு வேலை? சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்கை இயல்பன்றோ உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கீழ் படிந்து நடக்கின்றனவோ’ என்று யசோதை அவளை வெறுத்து நிற்க , அதற்கு அவள் ‘ அவன் செற்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே ‘ என்று உள்வெதும்பி உரைக்கின்றனளென்க.

English Translation

O Yasoda1 Storing sweet Laddus, salty Seedias and Sesame sweet-balls in separate pots, I came out saying, “Aho, these are my favorites!” This fellow entered and made sure I received it all! Then again he entered the house and searched the rope-shelves for white butter. Call your son, is this any way to bring up children?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்