விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேசவனே!  இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
    நேசம் இலாதார் அகத்து இருந்து*  நீ விளையாடாதே போதராயே*
    தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்*  தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
    தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்*  தாமோதரா!  இங்கே போதராயே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகத்து இருந்து - அகங்களிலே யிருந்து
விளையாடாதே - விளையாட்டொழிவது மன்றி,
தூசனம் சொல்லும் - (உன்மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற
தொழுத்தைமாரும் - (இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்
தொண்டரும் - (இடையர்க்கு) அடியரானவர்களும்
 

விளக்க உரை

கண்ணபிரானே! நீ விளையாடுதற்கு இங்கே விசாலமான இடமுண்டே; இழிசனங்களான வேலைக்காரிகளும் வேலைக்காரருங்கூட உன்மேல் குற்றங்குறைகள் கூறும்படி பொறாமைக்காரர்களுள்ள விடங்களில் இருந்துகொண்டு விளையாடாமல், அசைந்திடுங் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும்படி இங்கு வாராய் என்றழைக்கிறாள் யசோதைப் பிராட்டி. ஸ்நேஹம் என்ற வடசொல் ‘நேசம்’ என விகாரப்பட்டது. தூசனம் – டி ஷணம். தொழுத்தைமார் - அடிமைப்பெண்கள்; இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தாங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாயிருக்கும்; ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையுமுயிரையு மெழுதிக்கொடுத்துவிட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளைப் பொறுக்கவொண்ணாதென்ற கருத்தை காண்க. தன்மம் - ?? (தாமோதரா) என்கயிறுண்டு, உன் வயிறுண்டு, அங்கு நின்று பெறும்பேறு என்? என்பது உள்ளுறை.

English Translation

“Kesava, come here, do not say you can’t. Do not go to play in the houses of loveless ones. Comes away from places where servants and maids of cowherd-folk speak ill of you. Listening to Mother’s words in Dharma, know it. O Damaodara, come here”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்