விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
  ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 
  கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
  வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோதுகலம் உடை - (எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன்மேல்) உடைய;
ஓ குட்டனே - வாராய் பிள்ளாய்;
குன்று - (கோவர்த்தனம் என்னும்) மலையை;
எடுத்தாய் - (குடையாக) எடுத்தவனே;
குடம் ஆடு கூத்தா - குடக் கூத்தாடினவனே;

விளக்க உரை

“அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப்பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள். ‘கோதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது; ‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணைவினையைக் கொள்ளும்போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்: ‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத்தருதல் அறிக. கோதுகலம் - ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம். இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங்களையுடைய)வனே! என்று கருத்தாம். இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள். குடமாடு கூத்தா - குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி: குடக்கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க. வேதப்பொருள் - வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.

English Translation

“O Celebrated little one, O Pot-dancer, O Substance of the Vedas! My Lord of Venkatam, Wonder-Lord! You held a mount against a hailstorm. Come here now, do not say you won’t. When the neighbours say something and speak something else, I will not bear it. Come here right now!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்