விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
    மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 
    சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
    ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆலை கரும்பு அனைய - ஆலையிலிட்டு ஆடும்படி முதிர்ந்த கரும்பைப் போன்று
இன்மொழி - மதுரமான மொழியையுடைய
அசேதை நல்லாய் - யசோதைப்பிராட்டி!
பல் வளையாள் - பலவகை வளைகளை அணிந்துள்ள
என் மகன் - என் மகனானவன்

விளக்க உரை

கண்ணபிரான் தன்தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் பண்டுபோலப் பிறரகங்களிற் புகுந்து தீம்புகளைச் செய்ய, ஓராய்ச்சி யசோதை பக்கலிலே வந்து தன் அகத்தில் அவன் செய்த தீம்புகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். மேலையகம் - யசோதையின் அகத்துக்கு மேலண்டைவீடு என்க. மேற்கு + அகம், மேலையகம்.

English Translation

O Yasoda! My fair bangled daughter milked the cows, placed the milk on a stove and safe by it while I went up-house to fetch some fire. I stood there awhile talking. The Saligrama-bearing Lord tilted the vessel bottoms up and drank all the milk. O Dame of sugar-sweet speech, call your son here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்