விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!*  நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி- 
  ஊரகத்தாய்,* ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்!*  உள்ளுவார் உள்ளத்தாய்,*  உலகம் ஏத்தும்- 
   
  காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*  காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு- 
  பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*  பெருமான் உன் திருவடியே பேணினேனே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கள்வா - கள்வனே!
காமரு - விரும்பத்தக்கதாய்
பூ - அழகியதான
காவிரியின் - திருக்காவேரியினது
தென் பால் - தென் புறத்திலே

விளக்க உரை

உள்ளுவபருள்ளத்தாய்! – காஞ்சீக்ஷரத்தில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம்போலவே தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு ‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ; இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும். பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர, பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது. தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி. எம்பெருமானுக்கு, பரமகதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும் நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது. உலகமேத்துங் காரகத்தாய் = காரகமென்கிற திவ்யதேசமும் திருக்கச்சிமாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது. (இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)

English Translation

O Lord who resides in the water, on the lofty peaks, in Nila-Tinga! Tundam, in prosperous kanchi, in the port city of Vehka, in the hearts of devotees in Karvanam , on the Southern banks of beautiful kaveri in Perakam, and forever in my Heart! O trickster, I desire your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்