விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வற்புஉடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள*  வடிவாய மழுஏந்தி உலகம் ஆண்டு,* 
    வெற்புஉடைய நெடுங்கடலுள் தனிவேல்உய்த்த*  வேள்முதலா வென்றான்ஊர் விந்தம் மேய,*
    கற்புஉடைய மடக்கன்னி காவல் பூண்ட*  கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,* 
    பொற்புஉடைய மலைஅரையன் பணிய நின்ற*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வற்பு உடைய - மிடுக்குடைய
மன்னர் - (கார்த்த வீரியார்ஜீனன் முதலான) அரசர்கள்
மாள - முடியும்படி
வடிவு ஆய - அழகியதான
மழு - கோடாலிப்படையை

விளக்க உரை

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த வேள்முதலா வென்றானூர் = முற்காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப்பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும் அழித்துக்கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க, மைநாகமலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க, தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச்செலுத்தி அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது. அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுரயுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று. ‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர். மன்மதனைப்போல் அழகிற் சிறந்தவனென்க. நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜயவ்ருத்தாந்தத்தைப் பேசும்போது “நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க. ”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

English Translation

The Lord who wielded a sharp battle axe against mighty Asura kings and ruled the Earth and conquered the spear-wielding subramanya and others resides in Punkavalur, guarded by the beautiful dame Parvati, resident of the Vindhayas, and worshipped by Malai Ariyan, king of the mountains.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்