விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானவர் தங்கள் கோனும்*  மலர்மிசை அயனும்,*  நாளும்- 
    தேமலர் தூவி ஏத்துவடிம்*  சேச் செங்கண் மாலை,* 
    மானவேல் கலியன் சொன்ன*  வண்தமிழ் மாலை நாலைந்து,* 
    ஊனம்அதுஇன்றி வல்லார்*  ஒளிவிசும்பு ஆள்வர் தாமே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் தங்கள் கோனும் – தேவேந்திரனும்
மலர்மிசை அயனும் – பூவிற்பிறந்த பிரமனும்
நாளும் – நாள்தோறும்
தே மலர் தூவி – தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும் – துதிக்கும்படியாகவுள்ள

விளக்க உரை

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும் இடைவிடாது நன்மலர்களைப் பணிமாறித் துதிக்கப் பெற்றிருக்கின்ற செங்கண்மால் விஷயமாகக் கொற்றவேற்பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This fragrant garland of Tamil songs by spear-wielding Kalian extols the adorable. Lord with lotus eyes and lotus feet whom Brahma and indra worship with nectared flowers. Those who master it perfectly will rule over the radiant sky-worlds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்