விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிண்டியார் மண்டை ஏந்தி*  பிறர்மனை திரிதந்துஉண்ணும்- 
    உண்டியான்*  சாபம் தீர்த்த  ஒருவன்ஊர்,*  உலகம் ஏத்தும்-
    கண்டியூர் அரங்கம் மெய்யம்*  கச்சிபேர் மல்லை என்று- 
    மண்டினார்,*  உய்யல் அல்லால்*  மற்றையார்க்கு உய்யல்ஆமே? (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறர்மனை – அயலாருடைய வீடுகளிலே
திரிதந்து – திரிந்து (பிச்சையெடுத்து)
உண்ணும் – ஜீவித்த
முண்டியான் – மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம் – ப்ரஹ்மத்திசாபத்தை

விளக்க உரை

எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். என்று வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது. அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்யவழியில்லை யென்கிறாரிவ்வாழ்வார். “உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாடபேதங்கள் உண்டி-உணவு; பிச்சையெடுத்து உண்ணப்பட்ட உணவையுடையவன் என்றபடி. “இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே வீணாக க்லேசப்படாதே “காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலையிலிருந்து வாழுஞ் சோம்பரையுகத்திபோலுஞ் சூழ்புனலரங்கத்தானே!“ என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்காக இருப்பவர்கட்கே எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்குமென்றதாயிற்று.

English Translation

This fragrant garland of Tamil songs by spear-wielding Kalian extols the adorable. Lord with lotus eyes and lotus feet whom Brahma and indri worship with nectared flowers. Those who master it perfectly will rule over the radiant sky-worlds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்