விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காற்றினை புனலை தீயைக்*  கடிமதிள் இலங்கை செற்ற- 
    ஏற்றினை,*  இமயம் ஏய*  எழில்மணித் திரளை,*  இன்ப-
    ஆற்றினை அமுதம்-தன்னை*  அவுணன் ஆர்உயிரை உண்ட- 
    கூற்றினை,*  குணங்கொண்டு உள்ளம்*  கூறுநீ  கூறுமாறே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்ட - கவர்ந்த
கூற்றினை - ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம் - நெஞ்சமே!
குணம் கொண்டு - திருக்குணங்களை முன்னிட்டு
கூறு - அநுஸந்திக்கப்பார்;

விளக்க உரை

கடிமதிளிலங்கைசெற்ற ஏற்றினை=பல மதிள்களை அரணாகக் கொண்டிருந்த இலங்காபுரியைச் சுடுகாடாக்கின. மஹாவீரன் என்றவாறு.- இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்காபுரியாகக் கொள்ளத்தக்கது. அது கடலால் சூழப்பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும். அது பத்துத் தலைகளையுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது; இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது; அதில் சீதாபிராட்டி தீனதசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறைவைக்கப்பட்டு வருந்திக்கிடக்கிறான். அங்குச் சிறிய திருவடிவந்து ஸ்ரீ ராமகுணகீர்த்தநம்பண்ணி க்ரமேண சிறைவிடுத்ததுபோல, இங்கும் அத்திருவடியைப்போல் மஹாபண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத்குணங்களை உபதேசித்துச் சிறைவிடுவிக்க முயல்வார்கள். முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்ததுபோல இந்தப்ராக்ருதசரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க. இமயமேய எழில்மணித் திரளை=இமயம் என்று பொன்னுக்கப் பெயருண்டாதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே; அப்போது மேற்பதத்தை ‘ஏயு‘ என்று பிரித்து பொன்போலப் புகர்கொண்டவனென்று உரைத்துக் கொள்க. அன்றியே, “எண்கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல, இமயமலையின்கணுள்ள திருப்பிரிதியில் நித்யவாஸம் பண்ணுமவனென்னவுமாம். அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.

English Translation

The Lord who is wind, water and fire, the strong one who destroyed the fortressed Lanka, the mountain like heap of beautiful gems, the sweet flood of ambrosia came as the death blow to Hiranya. How can we praise him enough? Tell me, o Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்