விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
  கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
  புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
  அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெண்ணெய் - வெண்ணெயை;
விழுங்கி - (நிச்சேஷமாக) விழுங்கிவிட்டு;
வெறுங் கலத்தை - (பின்பு) ஒன்றுமில்லாத பாத்ரத்தை ;
வெற்பிடை  இட்டு - கல்லிலே போகட்டு;
அதன் ஓசை - அப்படி எறிந்ததனாலுண்டான ஓசையை;

விளக்க உரை

இவ்வாறு ஒரு இடைச்சி யசோதையிடம் வந்து முறையிடுகின்றாள். உன் மகன் எங்களுடைய வீட்டில் வந்து, நாங்கள் சேர்த்து வைத்த வெண்ணெயையெல்லாம் விழுங்குகின்றான்; அவ்வளவோடும் நில்லாமல் அவ்வெண்ணெய் இருந்த கலத்தைக் கற்பாறைகளிலே இட்டு உடைத்து “ஓசை நன்றாயிருக்கிறது” என்று சொல்லுகிறான். இவன் செய்யும் தீம்புகளோ எங்களாற் பொறுக்கப்போகிறதில்லை; புண்ணிலே புளிரஸத்தைப் பிழிந்தால் எப்படி பொறுக்க முடியாதோ அப்படி பொறுக்கமுடியாத தீமைகளை ஒவ்வொரு வீட்டிலும் செய்கிறான். இவனது திருட்டுத் தொழிலைத் தடுக்கலாமென்றாலும் எங்களாலாகவில்லை. ஆகையால், யசோதையே, நீ உன் பிள்ளையைக் கூவியழைத்துத் தீம்பு செய்யவொட்டாதபடி வீட்டிலே உன் பக்கத்திலேயே வைத்துக்கொள் என்கிறாள். புரை - வீடு; ஆல் - அசை. “அண்ணற்கு அண்ணான்” - குணத்தினாலொவ்வாதவனென்று முரைக்கலாம். “தன்னம்பிநம்பியு மிங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான்” என்றபெரிய திருமொழிப் பாசுரம் காண்க; அண்ணான் - எதிர்மறைவினையாலணையும் பெயர். அண்ணல் - ஆண்பாற் சிறப்புப்பெயர்.

English Translation

O Dame Yasoda! The child you have is a fitting partner to his brother. Like tamarind poured over a wound, alas, they gobble up the butter then throw the earthen pots on a rock to hear the crashing sound. Call up your son. He goes from house to house deftly doing wicked deeds. We are not able to guard against the things he has learnt, you must restrain him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்