விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 
    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருக்கொடு - (புருஷஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக்கொண்டு;
நீர் - தீர்த்தத்தை;
சங்கில் - சங்கத்திலே;
கொண்டிட்டு - கொணர்ந்து;
எழில் - விலக்ஷணரான;

விளக்க உரை

“உனக்கு ரக்ஷையிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப்போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷையிடும்படி வராவிட்டாலும் நாற்சந்தியிலே செருக்குடன் விளையாடித்திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும். தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷையிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தைவிட்டு வரவேணும், என்கிறாள். இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது.

English Translation

O Lord residing in resplendent Vellarai! Listen to Mother’s words for a few more days. Bright Vedic seers have come with Rig Mantras and conches filled with water. Do not stand at the crossroads resisting. Come, let me light the evening lamp and shine it on your face to ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்