விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
    விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
    வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
    படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியோ மோடும - தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்;
நின்னோடும் - ஸ்வாமியான தேவரோடும்;
பிரிவு இன்றி - பிரிவில்லாமல்;
ஆயிரம் பல்லாண்டு - (இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்;
வடிவு ஆய் - உனக்கு நிரூபகபூதையாய்;

விளக்க உரை

சேதனர்களாகிய அடியோங்களுடனும் சர்வ சேஷியான தேவரீரோடும் இருக்கும் சம்பந்தம் நெடு நாள் அளவும் நித்தியமாய் இருக்க வேணும். அடுத்து எம்பெருமானின் வலது திருமார்பில் பெரிய பிராட்டியார் தொடக்கமாயுள்ள நாய்ச்சிமார்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். பிறகு எம்பெருமானின் வலத்திருக்கையில் இருப்பவனும், பகைவரை எரிக்குமவனுமாகிய திருவாழி ஆழ்வானுக்கு பல்லாண்டு பாடுகிறார்; யுத்த களத்திலே முழங்கப் படுகிற அளவற்ற பெருமையை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கும் பல்லாண்டு பாடுகிறார் இந்த பாசுரத்திலே. அடியோமோடும் என்னும் சொல்லானது பன்மையைக் குறிக்கும் – அடியோம் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களை ஆகும். நின்னோடும் என்ற சொல் எம்பெருமானை குறிக்கும். முதல் வரியாலே அடியோமோடும் என்று இந்த லீலா விபூதியிலுள்ள தங்களையும், அடுத்த மூன்று வரிகளாலே நித்ய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலியவர்களை இந்த பாசுரத்திலே ஆழ்வார் காட்டியிருப்பதால் உபயவிபூதியிலுமுள்ள எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடினார் என்பது பூருவர்களின் திருவாக்கு ஆகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது வழக்கமாகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது என்பது பூருவர்கள் காட்டின வழியாகும். இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருமாளிகைகளிலும், திருக்கோவில்களிலும் இந்தக் க்ரமத்திலே அனுசந்திப்பர். மேலே வரும் பாசுரங்களில் ஆழ்வார் ஒரு அதிகாரியிடம் இருந்து பல காலம் சிஷ்யனாய் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று எழுத்துக்களின் சேதனர்களாகிய அடியோங்களுடனும் சர்வ சேஷியான தேவரீரோடும் இருக்கும் சம்பந்தம் நெடு நாள் அளவும் நித்தியமாய் இருக்க வேணும். அடுத்து எம்பெருமானின் வலது திருமார்பில் பெரிய பிராட்டியார் தொடக்கமாயுள்ள நாய்ச்சிமார்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். பிறகு எம்பெருமானின் வலத்திருக்கையில் இருப்பவனும், பகைவரை எரிக்குமவனுமாகிய திருவாழி ஆழ்வானுக்கு பல்லாண்டு பாடுகிறார்; யுத்த களத்திலே முழங்கப் படுகிற அளவற்ற பெருமையை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கும் பல்லாண்டு பாடுகிறார் இந்த பாசுரத்திலே. அடியோமோடும் என்னும் சொல்லானது பன்மையைக் குறிக்கும் – அடியோம் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களை ஆகும். நின்னோடும் என்ற சொல் எம்பெருமானை குறிக்கும். முதல் வரியாலே அடியோமோடும் என்று இந்த லீலா விபூதியிலுள்ள தங்களையும், அடுத்த மூன்று வரிகளாலே நித்ய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலியவர்களை இந்த பாசுரத்திலே ஆழ்வார் காட்டியிருப்பதால் உபயவிபூதியிலுமுள்ள எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடினார் என்பது பூருவர்களின் திருவாக்கு ஆகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது வழக்கமாகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது என்பது பூருவர்கள் காட்டின வழியாகும். இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருமாளிகைகளிலும், திருக்கோவில்களிலும் இந்தக் க்ரமத்திலே அனுசந்திப்பர். மேலே வரும் பாசுரங்களில் ஆழ்வார் ஒரு அதிகாரியிடம் இருந்து பல காலம் சிஷ்யனாய் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று எழுத்துக்களின் சேதனர்களாகிய அடியோங்களுடனும் சர்வ சேஷியான தேவரீரோடும் இருக்கும் சம்பந்தம் நெடு நாள் அளவும் நித்தியமாய் இருக்க வேணும். அடுத்து எம்பெருமானின் வலது திருமார்பில் பெரிய பிராட்டியார் தொடக்கமாயுள்ள நாய்ச்சிமார்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். பிறகு எம்பெருமானின் வலத்திருக்கையில் இருப்பவனும், பகைவரை எரிக்குமவனுமாகிய திருவாழி ஆழ்வானுக்கு பல்லாண்டு பாடுகிறார்; யுத்த களத்திலே முழங்கப் படுகிற அளவற்ற பெருமையை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கும் பல்லாண்டு பாடுகிறார் இந்த பாசுரத்திலே. அடியோமோடும் என்னும் சொல்லானது பன்மையைக் குறிக்கும் – அடியோம் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களை ஆகும். நின்னோடும் என்ற சொல் எம்பெருமானை குறிக்கும். முதல் வரியாலே அடியோமோடும் என்று இந்த லீலா விபூதியிலுள்ள தங்களையும், அடுத்த மூன்று வரிகளாலே நித்ய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலியவர்களை இந்த பாசுரத்திலே ஆழ்வார் காட்டியிருப்பதால் உபயவிபூதியிலுமுள்ள எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடினார் என்பது பூருவர்களின் திருவாக்கு ஆகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது வழக்கமாகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது என்பது பூருவர்கள் காட்டின வழியாகும். இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருமாளிகைகளிலும், திருக்கோவில்களிலும் இந்தக் க்ரமத்திலே அனுசந்திப்பர். மேலே வரும் பாசுரங்களில் ஆழ்வார் ஒரு அதிகாரியிடம் இருந்து பல காலம் சிஷ்யனாய் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று எழுத்துக்களின் அர்த்தங்களை வெகு அழகாக, எல்லோருக்கும் புரியும் படியாக பாசுரங்களை அருளிச் செய்த கிரமத்தை அனுபவிப்போம்.

English Translation

To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many a thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்