விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 
    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இ ஊரில் - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே;
தீமைகள் செய்வார் - தீம்புகளைச்செய்பவர்களாகிய
பிள்ளைகள் - சிறுவர்கள்;
பல் ஆயிரவர் - அனேக ஆயிரக்கணக்கானவர்கள்;
எல்லாம் - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்;

விளக்க உரை

பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம்தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம். எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார். எல்லாம் போகாது - ஒருமைப் பன்மை மயக்கம்.

English Translation

O Lord residing at Vellarai with good people! O Effulgent Knowledge! Here in the town, wicked boys are galore, the blame for all their misdeeds will fall on you. Come here, let me praise and bless your form words by the mouthful and give you a good ward-off of the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்