விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்னார் என்றுஅறியேன்,* 
    அன்னே! ஆழியொடும்,*
    பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
    இன்னார் என்றுஅறியேன்.   (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழியொடும் - திருவாழியாழ்வானையும்
பொன்ஆர் சார்ங்கம் - அழகுபொருந்திய சார்ங்க வில்லையும்
உடைய - (திருக்கையிலே) உடைய வரான
அடிகளை - ஸ்வாமியை
இன்னார்என்று - இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன்

விளக்க உரை

“கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால் இங்கேபோதுங் கொலோ” என்று கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய வருகையைப் பிரார்த்தித்து மநோரதித்த பரகால நாயகிக்கு உருவெளிப்பாட்டாலே காட்சி தந்தருளுனான் எம்பெருமான்; ஆழியும் சார்ங்கமு மேந்திவந்து ஸேவை ஸாதித்தான்; அஸாதாரண லக்ஷணங்களைக் காணா நிற்கச் செய்தேயும்; இன்னாரென்று அறுதியிடக்கூடாமலிருக்கிறதாயிற்று அத்தலையில் வைலக்ஷண்யம். பெருமையைப் பார்க்குமிடத்தில் தேவனென்னலாயிருந்தது; எளிமையைப் பார்க்குமிடத்தில் மனிதாரிலே ஒருவனென்னலாயிருந்தது; ஆகவே ‘இன்னாரென்றறியேன்’ என்கிறாள். - வியப்புக்குறிப்பிடைச் சொல். ஆடிகள் - ஸ்வாமி.

English Translation

I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்