விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காமற்கு என்கடவேன்,*
    கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*
    பூமேல் ஐங்கணை*  கோத்துப் புகுந்துஎய்ய,*
    காமற்கு என்கடவேன்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐகணை - பஞ்சபாணங்களை
கோத்து - (கருப்புவில்லிலே) தொடுத்து
புகுந்து - உள்ளேபுகுந்து
எய்ய - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக
காமற்கு - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு

விளக்க உரை

‘தாலிகட்டின கணவன் வருத்தப்படுத்துவது ஸஹஜம்’ வயிற்றிற் பிறந்த பிள்ளை வருத்தப்படுத்துவதற்கு என்ன ப்ராப்தியுண்டு; என்கிறது இப்பாசுரம். ருக்மிணிப் பிராட்டியினிடத்து மன்மதனுடைய அம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனனாதலால், மன்மதன் கண்ணபிரானுடைய புத்திரனென்றும் கண்ணன் ‘காமன்றன்தாதை’ என்றும் வழங்கப்படுவதுண்டு; இப்பரகாலநாயகியும் கண்ணபிரானுடைய தேவியாதலால் இவள் மன்மதனைத் தன் புதல்வனாகப் பாவித்துப் பகர்தல் தகுதியே. இப்பாட்டில் மன்மதனைப் புத்திரனாகப் பாவித்துக் கூறுதல் ஸ்பஷ்டமாக இல்லையாயினும், மேலே (11-3-7) “காமன்றனக்கு முறையல்லேன்……. எனக்குத் தானும் மகன் சொல்லில்” என்ற பாட்டில் இது ஸ்பஷ்டமாயிருப்பதால் அக்கருத்தே இங்கும் உள்ளுறையுமென்க. “வயிற்றிற் பிறந்த காமனுக்கு என் கடவேன்” என்பர் பெரியவாச்சான்பிள்ளையும். நல்லதோ கெட்டதோ கருமாமுகில் வண்ணனான நமது நாயகனாலே நமக்கு நேருவதாயிருந்தால் ப்ராப்தமென்று ஒருவாறு ஸஹிக்கலாம்; நம் வயிற்றில் பிறந்த ஒரு சிறுபயல் நம்மை அம்பு தொடுத்து நலியும்படியாகவோ நம் கதியாயிற்று! என வருந்துகின்றாள். “பேரமர் காதல் கடல்புரைய விளைத்த காரமர் மேனி நங்கண்ணன்” என்கிறபடியே காதலை வளர்த்த கார்முகில் வண்ணர் வாளாவிருக்க இந்தச் சிறு பையல் ஏதுக்காக அதிகப் ரஸங்கம் பண்ணுகிறானென்கிறாள். (ஐங்கணை) ‘பஞ்சபாணன்’ என்பது மன்மதனுக்கு வழங்கும் பெயர் “மதனன் பஞ்ச பாணமாவன, முல்லை யசோகு முழுநீலம் சூதப்பூ, அல்லி முளாரியோடைந்தென மொழிப” என்ற திவாகர நிகண்டினால் பஞ்சபாணவகைப் பெயர் உணர்க. ஆசை அதிகாரித்துச் செல்லுவதையும், அது கைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு..

English Translation

What can I give kama? Other than serving the dark hued Lord, the Father of sugarcane-bow-wielder, what can I give kama?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்