விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூவாய் பூங்குயிலே,* 
    குளிர்மாரி தடுத்துஉகந்த*
    மாவாய் கீண்ட*  மணிவண்ணனை வர,*
    கூவாய் பூங்குயிலே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குளிர்மாரி - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை
தடுத்து - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து
உகந்த - திருவுள்ளமுவந்தவனும்
மா   வாய்கீண்ட - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும்
மணி வண்ணனை - நீலமணி நிறத்தனுமான எம            பெருமானை

விளக்க உரை

“மாவாய் கீண்ட” என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “பகாஸூரனுடைய வாயைக்கிழித்த” என்று பொருள் காண்கிறது. இஃது அச்சுப் பிழையாயிருக்கலாமோ வென்று ஸந்தேகிக்கவுரியது அருளிச்செயலிற் பலபலவிடங்களில் “மாவாய் கீண்ட” என்றும் “மாவாய்பிளந்த” என்றும் வருவதுண்டு; இங்ஙனே வருமிடந்தோறும் (குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மஸுரனுடைய வாயைக் கிழித்த) என்றே பொருளுரைக்கப் பட்டுள்ளது. மா-குதிரை.

English Translation

Coo, Coo, Good koel! Stopping a halistorm, he did teat the jaws of a mighty horse, -gem Lord! Coo his arrival!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்