விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற*  வள்உகிரால் பிளந்து,*  அன்று- 
    பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த*  பெருமைகொலோ செய்தது இன்று,*
    பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை*  பெருமையை நினைந்திலை பேசில்,* 
    கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருந்தலன் – பகைவனான இரணியனுடைய
ஆகம் – சரீரத்திலே
புள் – (கழுகு பரந்து முதலிய பறவைகள்)
உவந்து ஏற – மகிழ்ந்து ஏறியுண்ணும்படியாக
வள் உகிரால் – கூர்மையான நகங்களாலே

விளக்க உரை

கடல்வண்ணனே! இப்பரகாலநாயகியின் வைலக்ஷண்யத்தை நீ சிறிதும் நினைக்கின்றிலை, இவ் எப்படிப்பட்டவள் தெரியுமோ? (பெருந்தடங்கண்ணி) “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலைர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய்“ என்னும் படியான விச்வரூப வடிவுகொண்டு இவளை நீ அநுபவிக்கப் புக்காலும் உன்னுடைய அந்த்த் திருமேனிப் பரப்பை யெல்லாம் இவள் தன் கடைக்கண் நோக்கத்தின் ஒரு மூலையிலே ஆழங்காற்படுத்திக் கொள்ள வல்லள்காண் என்கை. இப்படி பட்டவளையோ நீ உபேக்ஷிப்பது? இரணியனை வள்ளுகிரால் பிளந்தொழித்த நம்முடைய பெருமைக்கும் வாலியை முடித்த நம்முடைய மிடுக்குக்கும் இவள் ஈடோ? என்று நினைக்கிறாய்போலும். ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்வதற்காக இரணியனை முடித்தாயென்றும், ஸுக்ரீவனுக்கு அருள் செய்வதற்காக வாலியை முடித்தாயென்றும் கேள்விப்படுகிறோம், இதனால் ஆச்ரிதவாத்ஸல்ய முடையவன் நீ என்று தெரிகிறது. அக்குணம் இவள் திறத்திலே இங்ஙனேயோ பலித்த்து? (கவுள் கொண்ட நீராமிவளெனக் கருதுகின்றாயே) கபோலமென்னும் வடசொல் கவுள் எனச் சிதைந்த்து, வாய்க்குள் கொள்ளப்பட்ட நீர் உள்ளே இழிச்சுகைக்கும் வெளியில் கொப்பளிக்கைக்கும் உரியதாயிருக்குமாபோலே ‘இவளைக்கைப்பற்றினாலும் பற்றுவோம், விட்டாலும் விட்டிடுவோம்’ என்று நினைத்திருக்கிறாயேயன்றி, * பெருந்தடங்கண்ணி சுரும்புறு கோதையாகிய இவளையோ நாம் உபேக்ஷிப்பது என்று திருவுள்ளம் பற்றுகிறாயில்லையே! என்கிறாள்.

English Translation

O Dark-cloud Lord! You came out of hiding and destroyed the mighty chest of Hiranya with your sharp claws. You stood in hiding and destroyed the mighty chest of vali with your sharp arrows. Is this a sign of your high reputation that you do not reveal yourself to your bee-humming flower-coiffured large-eyed dear daughter? Do you consider her as lighty the proverbial mouthfull of water, -to be swallowed or spitted as you will?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்