விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரக்கியர் ஆகம் புல்என வில்லால்*  அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
    செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற*  சேவகமோ? செய்ததுஇன்று*
    முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்*  கொண்டு முன்னே நின்று போகாய்,* 
    எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்*   என்செய்வது? எந்தை பிரானே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வில்லால் – ஒரு வில்லாலே
செருக்கு அழித்து – கொழுப்படக்கி
அமர்ர் பணிய நின்ற – தேவர்கள் வணங்குமாறு நின்ற
சேவகமோ – பராக்ரமத்தை நினைத்தோ
இன்று செய்த்து – இன்று (இவள் திறத்திலே உபேக்ஷ) செய்வது?

விளக்க உரை

பிரானே! இவளுடைய அதரத்தின் வைலக்ஷண்யத்தை சிறிதும் நினைக்கிறாயில்லையே, இவளது உடலை ஈர்க்குபோல இளைக்கச்செய்து கைவளைகளைக் கழலச் செய்தாயே! உன்னை மறந்தாவது இவள் பிழைக்கலாமென்று பார்த்தால் அது தனக்கும் இடமறும்படி உருவெளிப்பாடாலே நலிகின்றாயே, அபலையான இவளைக் கொலை செய்வதற்கு நீ இத்தனை ப்ரயாஸங்கொள்ள வேணுமோ? தன்னடைய பழுத்து நெகிழ்ந்து விழக்கடவதான எருக்கிலையை உதிர்ப்பதற்கு மழுப்படைகொண்டு வியாபரிப்பாருண்டோ? இராவணனை ஸம்ஹாரம்பண்ணி, தேவர்களால் வணங்கப்பெற்று நின்ற அந்த வீரச்செயலை இன்று நீ இவள் திறத்திலே காட்டுகின்றாய்போலும் என்கிறாள். அரக்கியராகம் புல்லென –ராக்ஷஸ மாதர்களெல்லாரும் தாலியிழக்கும்படி என்றவாறு. ‘செருக்கழித்து’ என்றதை செருக்கு அழித்து என்றும், செருகழித்து என்றும் பிரிக்கலாம். (செரு – போர்க்களத்திலே, கழித்து-நிரஸிது என்றபடி) அமர்ர்பணிய முன்னின்ற –ஸ்ரீராமாயண யுத்தகாண்டத்தில் நூற்றிருபதாம் ஸர்க்கத்தில் இவ்விஷயம் விசதமாக்க் காணத்தக்கது. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி பரமபோக்யமாக வுள்ளது, அதாவது –“ராவணவதாந்ந்தரம் பிராட்டி எழுந்தருளிவர, பெருமாள் முகங்கொடாதே யொழிய, தேவஜாதி வந்து ‘பவாந் நாராயணோ தேவ, என்றும் ஸீதா லக்ஷ்மீர் பவாந் விஷ்ணு, என்றும் உணர்ந்த, முகங்கொடாதே நின்ற அச்சேவகம்போலே யிருந்த்தீ! இச்சேவகமும்.“ என்று.

English Translation

Our Lord and Master! You entered the fortified Lanka city and destroyed the mighty Rakshasa king, leaving his wives bereaved. Gods in the sky came and worshipped you then, Is this how you show your valour now? You take our red-berry-lipped girl;s ivory bangles from her wrist and never show yourself to her. Like the proverb, why swing an axe to fell a milkweed leaf?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்