விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்கிய தோளும் மான்உரி அதளும்*  உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
    நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த*  கரதலத்து அமைதியின் கருத்தோ?*
    அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,* 
    சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்*  தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்கிய தோளும் - பணைத்த தோள்களையும்
மான் உரி அதளும் - மானின் உரிக்கப்பட்ட தோலையும்
உடையவர் தமக்கும் - உடையவரான சிவபிரானுக்கும்
ஓர் பாகம் - திருமேனியில் ஒரு பகுதியை
நல்கிய - (இடமாகக்) கொடுத்திருக்கிறோ மென்கிற

விளக்க உரை

அஹங்காரியான ருத்ரனுக்கும் நாம் உடம்பிலே ஒரு கூறு கொடுத்திருக்கிறோமென்கிற சீலகுணத்தை நினைத்தோ, நரகாசுரனை முடித்த மிடுக்குடையோமென்று கையில் மிடுக்கை நினைத்தோ இவளை நீ உபேக்ஷித்திருக்கிறாய் என்கிறாள். சிவபிரானுக்குத் திருமேனியில் கூறுகொடுதத்தையும் நரகனைத் தொலைத்ததையும் இங்கு எடுத்துக் கூறுவதன் கருத்து யாதெனில், இப்பரகால நாயகியை உபேக்ஷித்ததனால் நமக்கு யாதொரு அபகீர்த்தியும் விளைந்திடாது, அஹங்காரியான ருத்ரனுக்கு உடம்பில் இடங்கொடுத்த சீலகுணம் உலகமெங்கும் பரவியிருக்கும்போது இதுவொரு அபகீர்த்தியாகுமோ நமக்கு? என்று நினைக்கிறாயோ, நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்த பெருந்தேவிமார் இருக்க இவள் ஒரு பொருளோ என்று நினைக்கிறாயோ? என்பதாம். (அல்லியங்கோதை யணிநிறங்கொண்டு வந்து முன்னே நின்று போகாய்) அல்லியங்கோதை யென்பது பரகால நாயகியை, இவளுடைய அழகிய மேனி நிறம் விரஹ வேதனையினால் அழிந்தபோனது பற்றி ;அணிநிறங்கொண்டு; எனப்பட்டது. “முன்னே வந்து போகாய்“ என்றது உருவெளிப்பாட்டைச் சொன்னபடி. அதாவது, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாக உருவம் கண்ணுக்குத் தோற்றுகை. (வ்ருக்ஷே வ்ருக்ஷே பச்யாமி சீர க்ருஷ்ணாஜிநரம்பரம்“ என்று மாரீசனுக்கு இராமபிரானுடைய உருவம் எங்கும் தோற்றினது போல அன்பர்கட்கும் தோற்றுமென்க. இவளை அலக்ஷியம் செய்கிற நீ உருவெளிப்பட்டாலே இவளை நோவப்படுத்துவது எதுக்கு? உன்னை மறந்தும் வாழவொட்டாதே இப்படி ஹிம்ஸிப்பாயோ என்றாளாயிற்று. இவளை நீ உங்கள் தொண்டர்கைத் தண்டென்றவாறே - “சாபமாநய ஸௌமித்ரே“ என்று நினைத்தபோது வாங்கிக் காரியங் கொள்ளலாம்படி உரிய அடியார் கையில் ஆயுதத் தோபாதி நினைத்திரா நின்றாய்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. அடியவர்களின் கையிலுள்ள ஆயுதத்தை வாங்குதல் எப்படி அலக்ஷியமோ, அப்படி இவளையும் அலக்ஷியம் செய்கிறாயே! என்றவாறு.

English Translation

O Lord is it exulting in the goodness of your giving a place in your person to the deer-skin-wearer Siva, or you confidence in destroying Narakasura with bare hands, that you never deem it necessary to come and see this coiffured dame whose rouge you snatched then? Do not think she is as easy to retrieve as the proverbial bow from a servant;s hands. Alas, what use saying this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்