விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி*  ஆற்றலை ஆற்றல் மிகுத்து,* 
    கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்*  கடந்தநின் கடுந்திறல் தானோ,*
    நேர்இழை மாதை நித்திலத் தொத்தை*   நெடுங் கடல் அமுதுஅனை யாளை,* 
    ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் முகில் வண்ணா - காளமேகநிறத்தனே!
ஆர் எழில் வண்ணா - மிக்க அழகுடையவடிவு படைத்தவனே!,
நேர் இழை - நேர்மையான ஆபரணங்களை யுடையவளாய்
நித்திலம் தொத்தை - முத்துமாலை போன்றவளான
நெடு கடல் - பெரிய கடலில் தோன்றிய அம்ருதம் போன்றவளா

விளக்க உரை

விலக்ஷணமான ஆபரணங்களை யணிந்துள்ளவளும், அணைத்தால் தாபமெல்லாம் ஆறும்படியாக முத்துக்கொத்து போல் குளிர்ந்த வடிவுடையவளும், கடலில் தோன்றி அமுதம்போல இனியளுமான இப்பரகால நாயகியை ஒரு சரக்காகவே மதிக்கின்றாயில்லையே!, இஃது என்? நாம் சங்கு சக்கரங்களைக் கையிலேந்தியுள்ளோம் என்கிற பெருமையைப் பாராட்டியோ? கம்ஸனை முடித்த மிடுக்குடைய நமக்கு இவள் ஒரு சரக்கோ! என்று நினைத்தோ? சொல்லாய் பிரானே! என்கிறாள். ஆர்மலியாழி -ஆர் -கூர்மை. இனி, ஆர் என்று அரங்களுக்கும் பெயருண்டாதலால் அரங்கள் நிரம்பிய சக்கரம் என்றுமாம். (ஆற்றலை ஆற்றல் மிகுத்து) முதலிலுள்ள ‘ஆற்றல்’ என்பதற்குப் பராக்ரம்மென்று பொருள். அதற்குமேல், ஆற்றலாவது - ஆறுதல். ஆற்றல் மிகுத்து -ஆறுதல் மிகும்படியாகச் செய்து, பராக்ரமத்தை ஆறுதல் மிகும்படியாகச் செய்தலாவது - உலகத்தை யெல்லாம் ஸம்ஹரிக்கவல்லதான பராக்ரமத்தை ஒரு புழுவான கம்ஸனளவிலே அடக்கி உபயோகப்படுத்தின படியைச் சொன்னவாறு. தனக்குள்ள பராக்ரமத்தை முழுவதும் செலுத்தாமல் அதில் ஸ்வல்ப பாகங்கொண்டே கம்ஸனைக் கடிந்தமை கூறியவாறு. இங்கே வியாக்கியான வாக்கியங் காண்மின், - “(ஆற்றல் மிகுத்து) ஒரு ஜகதுபஸம்ஹாரத்துக்குப் போந்திருக்கச் செய்தே கம்ஸனளவிலேயாம்படி அமைத்து.“ (அங்கையில்வட்டாம் இவளெனக் கருதுகின்றாய்) “கையிலிருந்த கருப்புக் கட்டி தின்னவுமாய்ப் பொகடவுமாயிருக்குமிறே, அப்படியே நினைத்திருக்கிறாயோ இவளையும்“ என்பது வியாக்கியானம். உலகத்தில் எல்லார்க்கும் கைப்படாத பொருள்களில் விருப்பம் பெருகிச் செல்லுமேயன்றி, அப்பொருள்தானே கைப்பட்டுவிட்டால்பிறகு அதில் உபேக்ஷையே உண்டாகும். அதுபோல இப்பரகால நாயகியும் கைப்பட்ட சரக்காதலால் இவளை அலக்ஷியம் செய்கிறாய் போலும் என்கை.

English Translation

O Dark-cloud Lord! O beautiful Lard! Then in the yore you wielded a conch and discus, This jewelled girl, this garland of pearls, is sweet as ambrosia, You destroyed the mighty kamsa with ease! Is it that power of your that you take her to be as easy as the proverbial candy in her hands?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்