விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி*  மால்விடை ஏழும் அடர்த்து,*  ஆயர்-
    அன்று நடுங்க ஆநிரை காத்த*  ஆண்மை  கொலோ அறியேன் நான்,*
    நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!*  நீஇவள் தன்னை நின் கோயில்,*
    முன்றில் எழுந்த முருங்கையில் தேனா*  முன் கைவளை கவர்ந்தாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர் நடுங்க - இடையர்கள் நடுங்கிநிற்க
ஆநிரை - பசுக்கூட்டங்களை
காத்த - ரக்ஷித்தோமென்கிற
ஆண்மை கொலோ - மேனாணிப்பினாலோ?
நான் அறியேன் - என்ன காரணமென்று நான் அறிகின்றிலேன்

விளக்க உரை

நாற்சந்திகளிலே பெண்கள் கண்குளிர நின்று குடக்கூத்தாடி ஸ்திரீரத்னங்கள் பலவற்றையும் மயக்கியாண்டுகொண்ட நமக்கு இந்தப் பரகால நாயகி யொருத்தி ஒரு சரக்கோ? என்று நினைக்கிறாய் போலும், கொழுத்துச் செருக்கியிருந்த ஏழு ரிஷபங்களையும் வலியடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணந்துகொண்ட நமக்கு இவள் ஈடோ? என்று நினைக்கிறாய் போலும். கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்று கோவலரையும் கோநிரையையும் காத்தருளின பெருமை வாய்ந்த நமக்கு இவளொருத்தியை உபேக்ஷிக்குமளவால் என்ன குணக்கேடு வந்திடப்போகிறது! என்று நினைக்கிறாய் போலும் என்றாள் முன்னடிகளில் திருத்தாய், அதைக்கேட்ட எம்பெருமான் ‘இவளை நான் உபேக்ஷித்ததாகச் சொல்லுதற்கு யாதுகாரணம்? எதைக் கொண்டு நான் இவளை உபேக்ஷித்தேனாகச் சொல்லுகிறாய்? என்று கேட்க, இவள் தன்னை முன்கைவளை கவர்ந்தாயே!’ என்கிறாள். கையில் வளை நிற்கமாட்டாதபடி. இவளை ஒரு துரும்புபோலே இளைக்க செய்துவிட்டாயே! இது கொண்டு சொல்லுகிறேனென்றபடி. நின்கோயில் முன்றிலெழுந்த முருங்கையில் தேனா -நெடுந்தூரத்திலிருப்பதன்றியே ஸமீபத்தில் வாசதிலே உள்ளதான ஒரு மரத்தில் தேன் இருந்தால் அதனை எப்படி எளிதாகக் கவரலாகுமோ, அப்படி எளிதாக இவளது கைவளைகளைக் கவர்ந்து கொண்டாயே! என்றவாறு. மன்றில் மலிந்து கூத்தாடின ஆண்மையை நினைத்தோ, மால்விடை யேழுமடர்ந்த ஆண்மையை நினைத்தோ, ஆநிரை காத்த ஆண்மையை நினைத்தோ நீ இவ் தன்னை முன் கைவளை கவர்ந்தாய்? என விரிக்க.

English Translation

O Venkatam Lord! O Lord of deep-ocean hue! You stood at the cross roads and danced in joy, subdued seven dark buls, and saved the cows in distress! Was it a show of manliness that you stole the bangles from this girl;s hands -as deftly as the proverbial honey from the home garden;s Murugai tree? I do now know

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்