விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
    ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*
    கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
    பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கை - லங்காபுரியை
ஒள் எரி மண்டி உண்ண - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்
பணித்த - செய்தற்குறுப்பான
ஊக்கம் அதனை - நிடுக்கை
நினைந்தோ - திருவுள்ளம்பற்றியோ?

விளக்க உரை

எங்கள் கள்ளவிழ்கோதை காதலையும் அலக்ஷியம் செய்கிறாய், காரிகை மாதர் கருத்தையும் அலக்ஷியம் செய்கிறாய் என்று பின்னடிகளிற் கூறப்படுகின்றது. அதாவது, இவளுடைய கரைபுரண்ட காதனை நோக்கி நீ பதறியோடி வந்து இவளை கைப்பற்றவேணும், அது செய்கின்றிலை, வகுத்த விஷயத்தில் காதல் கொண்டவிது நன்றே என்று உகந்திடாமல் இதனைப் பழிக்கின்ற ஊரவர் ழிச்சொற்களை நோக்கியாகிலும் பதறியோடிவந்து இவளைக் கைப்பற்றி, பழிப்பவர்களின் முகத்தைப் பங்கம் செய்திடவேணும், அதுவும் செய்கின்றிலை, இரண்டையும் அலக்ஷியம் செய்திருக்கிறாய் என்றவாறு. இப்படி இவளை உபேக்ஷித்திருப்பதற்குக் காரணம் யாது? 1. “நல்லவென்தோழீ! நாகணை மிசை நம்பரர், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?“ என்னும்படியான உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இவளை இங்ஙனே அலக்ஷியஞ் செய்திருக்கிறது? என்கிறாள் முன்னடிகளில் பூதனையை முலையுண்டு முடித்த பெருமிடுக்குடைய நமக்கு இவள் ஈடோ? இராவணனை முடித்த மஹாவீரனான எனக்கு இவள் ஏற்றிருப்பளோ? என்று திருவுள்ளம்பற்றியிருக்கிறாய் போலும். க்ருஷ்ணாவதாரத்திலும் ராமாவதாரத்திலும் காட்டின பராக்கிரமங்களை நினைத்துச் செருக்கியிருக்கிறாய் போலும் என்றவாறு. புள்ளுருவாகிவந்த பூதனை - பூதனையானவன் பகாஸுரனைப்போலே பறவையினுருவங் கொண்டு வந்தாளென்று சொல்லுகிறதன்று, மேலே ஸஞசரித்துக் குழந்தைகளை அனுங்கப்பண்ணும் சில பறவைகளுண்டு, அப்படிப்பட்டவளாய் வந்தாளென்று இவளுடைய கொடுமையைக் குறிப்பிட்டவாறு. புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாளப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? இலங்கை யொள்ளெரி மண்டியுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ? என்று இரண்டு வாக்யார்த்தமாக விவக்ஷிதம். இனி, ;புள்ளுருவாகி; என்பதைப் பூதனைக்கு விசேஷணமாக்காதே எம்பெருமானுக்கே விசேஷணமாக்கி, புள்ளுருவாகிப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ? நள்ளிருள்வந்த பூதனை மாளப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? இலங்கை யொள்ளெரி மண்டியுண்ணப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? என்று மூன்று வாக்கியார்த்தமாக செய்தருளினபடியைச் சொல்லுகிறது. ஹம்ஸாவதாரமும் க்ருஷ்ணாவதாரமும் ராமாவதாரமும் செய்தோ மென்கிற செருக்குக் கொண்டோ இவளை உபேக்ஷிக்கிறாய் என்றதாயிற்று.

English Translation

O Lord! You speak lightly of our coiffured daughter;s love for your and the slander of the ladies, as if it were easy to retrieve her heart, like the proverbial cup from a child;s hands. Is it because you could destroy the ogrees Putana and burn the city of Lanka with ease?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்