விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
    எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*
    கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
    சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எல்லி பொழுது - இராப்பொழுதிலே
ஊடிய - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின
ஊடல் திறத்தை - வெறுப்புவார்த்தை விஷயமாக
கல்லில் மலி - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட)
தோள் - திருத்தோள்களையுடையரான

விளக்க உரை

ஆய்ச்சி இங்ஙனே பரணயரோஷம் தோற்றப் பேசின பேச்சுக்ளும் கண்ணபிரானுடைய திருவுள்ளத்திற்குப் பரமாநந்தத்தை விளைவிப்பவனவாயிருந்தன என்பதைத் தோற்றுவிக்கவேண்டி ;அல்லிக் கமலக்கண்ணனை எனப்பட்டது, திருவள்ளுவர் குறளில் - “புத்தலில் புலத்தேள் நாடுண்டோ நிலத்தொடு, நீர் இயைந்தன்னாரகத்து“ (நிலத்துடன் நீர் கலந்தாற்போன்ற கணவரிடம் ஊடுவதைப்போல நமக்கு இன்பந்தருவதொரு வான்நாடு உண்டோ? இல்லை.) என்றும், “உணவிலும் உண்டதறல் இனிது, அதுபோலக் காமத்திற்கு, புணர்ச்சியைக் காட்டிலும் ஊடுவது இனிது) என்றும் சொல்லுகிறபடியே புணர்ச்சியைக் காட்டிலும் ஊடல் இன்பம் பயக்குமாதலால் நெஞ்சிலுண்டான மகிழ்ச்சி திருக்கண்களில் புறவெள்ளமிட்டமைபற்றி அல்லிக் கமலக் கண்ணனெனப்பட்டானென்க.

English Translation

This garland of songs by strong armed Kaliyan recalls the lover;s quarrel of a cowherd-dame at night. Those who sing it as praise for the Lord will be rid of miseries

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்