விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆடி அசைந்து*  ஆய்மடவாரொடு நீபோய்க்*
    கூடிக் குரவை*  பிணை கோமளப் பிள்ளாய்,*
    தேடி திருமாமகள்*  மண்மகள் நிற்ப,*
    ஏடி! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு மா மகள் - பெரிய பிராட்டியாம்
மண் மகள் - பூமிப்பிராட்டியாரும்
தேடி நிற்ப - தேடிக்கொண்டிருக்க
நீ போய் - அவர்களை உபேக்ஷித்துப்போய்
ஆய் மடவாரொடு - இடைப்பெண்களோடே

விளக்க உரை

திருமாமகள் மண்மகள் தேடிநிற்ப ஆய்மடவாரொடு -ஆடியசைந்து போய்க்குரவைபிணை கோமளப்பிள்ளாய்!; என்று கண்ணனை விளித்து ஒருவார்த்தை சொல்லத் தொடங்கினாள் ஆய்ச்சி, அதற்குள்ளே கண்ணபிரான அவள்சொல்லப்போகிற வார்த்தையைத் தெரிந்துகொண்டு ;நங்காய்! என் சாயத்தையெல்லாம் வெளியிட வேண்டா, உன்னைக் கும்பிடுகிறேன்; என்று அவளது காலைப் பற்றிக்கொண்டான், ;இவனை உள்ளே புகவிட்ட தோழியையன்றோ பொடியவேண்டும்; என்று கருதி அவனை நோக்கி வார்த்தை சொல்லுகை தவிர்ந்து ;ஏடீயிதுவென் இதுவென் னிதுவென்னோ?; என்று தோழியை நோக்கியுரைத்துத் தலைக்கட்டினாளாயிற்று. திருமகளும் மண்மகளும் உன்னைத் தேடி நிற்கும்படியாக அவர்களை வஞ்சித்துவிட்டு ஆடியசைந்துகொண்டு சில ஆய்மடவாரோடு கூடிச்சென்று குரவைக் கூத்தாடிவிட்டு அவர்களையும் வஞ்சித்து என்பால் அன்புள்ளவன்போல இப்போது இங்கு வருகின்றாய், உடனே என்னையும் வஞ்சித்து ஓடப்போகிறாய், நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை, ஆகையாலே கடக்க நில் - என்றவாறு. “கருமலர்க் கூத்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பலா மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்து ஒரு பேதைக்குப்பொய் குறித்துப், புரிகுழல் மங்கை யொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாய்! உன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயைதானே“ என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

English Translation

While the lotus-dame Lakshmi and Earth Dame stood waiting, you went with the cowherd dames and rocked and rolled in the Kuravai dance. O soft one! O Dear! O, what is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்