விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆன்ஆயரும்*  ஆநிரையும் அங்குஒழிய,* 
    கூன்ஆயதுஓர்*  கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*
    போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
    ஏனோர்கள் முன்என்?*  இதுஎன்? இதுஎன்னோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆ நிரையும் - பசுக்கூட்டங்களையும்
அங்கு ஒழிய - அங்கேவிட்டுவிட்டு,
கூன் ஆயது - வளைந்திருப்பதாய்
கொற்றம் - ஐச்வாயஸூசகமான
வில் ஒன்று - ஒருவில்லை

விளக்க உரை

வாரீர் மஹாநுபாவரே!, உமக்கு நாங்கள் லக்ஷியமோ? இடையரும் கன்றுகளும் பசுக்களும் கிடைத்துவிட்டால் அவற்றை ரக்ஷிப்பதேயன்றோ உமக்குப்பணி. அந்த ஆனாயரையும் ஆநிரையையுமு விட்டுவிட்டு எதுக்கு இங்கு வந்தீர்? வருகிறவர் கொற்ற வில்லொன்றைக் கையிலேந்தி வந்தீர், ;ஆய்ச்சியிடம் போவதாகப் பிறர்க்குத் தெரிந்தால் அவமானமாகும், ஏதோ வேட்டையாடப் போவதுபோல் பாவனை செய்வோம், என்று கருதியன்றோ வில்லைக்கையிலேந்திவந்தீர். எங்களிடம் வருவது உமக்கு அத்தனை அவமானமா யிருக்கின்றதோ? போகிறவர்களையும் இருப்பவர்களையுமு கள்ள விழியிட்டுப் பார்த்துக்கொண்டே புகுகின்றீர், இங்ஙனே கூசியாகிலும் எதுக்கு நீர் இங்குவரவேணும்? உம்முடையவருகையினாலே ஏதேனும் பலன் கிடைப்பதாயிருந்தாலாகிலும் குற்றமில்லை, பழிகழிக்க வந்து போகிறீரித்தனை. இங்குள்ளவர்களோ ஒருவரும் விச்வாஸ முடையரால்லர் “அதுகண்டிவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே“ என்னும்படியான விரோதிகளின் கண் வட்டத்திலே வீண்பழியை மாத்திரம் விளைப்பதான இவ்வருகை எதுக்கு? ஸ்வாமிந்! இங்குப்புகாதே யெழுந்தருளீர் என்கிறாள்.

English Translation

Leaving the cowherd friends and their cows for behind, carrying a crooked bow in hand, you stood watching passers-by, now you enter slowly. Before the gods, O, what is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்